மசாலா பஜ்ஜி இட்லி

தேதி: November 18, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இட்லி -- 2 என்னம்
கடலை மாவு -- 1/2 கப்
மிளகாய் தூள் -- 3 1/2 ஸ்பூன்
வெங்காயம் -- 1 கப் ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம் ( நீளமாக கீறியது)
தக்காளி -- 2 என்னம் ( நறுக்கியது)
எண்ணைய் -- 1 கப்
தனியா தூள் -- 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் -- 3 சிட்டிகை
உப்பு -- தே.அ
கொத்தமல்லி தழை -- 1 ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)


 

தோசைக்கல்லை காயவைத்து இட்லியை போட்டு ஒரு ஸ்பூன் எண்ணைய் ஊற்றி திருப்பி திருப்பி போட்டு சிவக்கும் அளவு பொரித்து பின் எடுத்து தனியாக வைக்கவும்.
பின் இட்லியை 4 அல்லது 6 பீஸாக கத்தியால் நறுக்கி துண்டமாக்கவும்.
கடலைமாவில் சிறிது உப்பு சேர்த்து மிளகாய் பொடி 1 1/2 ஸ்பூன் போட்டு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
துண்டுகளாக்கிய இட்லியை பஜ்ஜி மாவில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணைய் 2 ஸ்பூன் காயவைத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி உப்பை போடவும்.
இதனுடன் தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், போட்டு ஒரு வதக்கு வதக்கி இரண்டு கையளவு தண்ணீர் தெளித்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
பின் பொரித்த பஜ்ஜியை சேர்த்து மீண்டும் ஒரு வதக்கு வதக்கி கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பறிமாறலாம்.
மசாலா பஜ்ஜி இட்லி ரெடி.


குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக இருக்கும் இது.
வித்தியாசமாகவும் ருசியாகவும் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்