புளிக்கீரை

தேதி: November 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளிக்கீரை

தேவையான பொருட்கள்:

அரைக்கீரை அல்லது முளைக்கீரை ----------ஒரு கட்டு
துவரம்பருப்பு--------------- அரை டம்ளர்
பச்சமிளகாய்------------------- ஆறுசிவப்பு
(காய்ந்த) மிளகாய் --------- -ஆறு
புளி----------------------------- பெரிய எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம்--------------------நாலுபெருங்காயம்-----------------------ஒரு ஸ்பூன்வெந்தயம்-------------------------அரை ஸ்பூன்
தாளிக்க:எண்ணெய்----------------------மூன்று ஸ்பூன்
கடுகு----------------------ஒரு ஸ்பூன்


 

பருப்பை குக்கரில் நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.புளியை தண்ணீரில் ஊறவைக்கவும்.
கீரையை அலசி பொடிபொடியாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை medium size க்கு நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
முதலில் கீரையை ரொம்ப தண்ணீர் விடாமல் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன்கடுகு தாளித்து பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் தாளித்து
வெந்தயம்,பெருங்காயம் போட்டு தாளித்து
வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
பிறகு புளியை நன்றாக கரைத்து (சாம்பார் அளவு)வதக்கியதில் கொட்டி கொதிக்கவிடவும்.
ஐந்து நிமிடங்கள் கொதித்தவுடன் மசித்த கீரையை போடவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து வேக வைத்த பருப்பை நன்றாக மசித்து கீரையில் சேர்க்கவும்.
நன்றாக பத்து நிமிடங்கள் கொதித்தவுடன் இறக்கி வைக்கவும்.புளிகீரை ரெடி.
சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்