www.arusuvai.com
புளியோதரை
தேவையானப் பொருட்கள்
- அரிசி - மூன்று கோப்பை
- பொடி தயாரிக்க:
- --------------
- காய்ந்த மிளகாய் - பத்து
- தனியா - 4 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- எள்ளு -3 தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஆறு எண்ணிக்கைகள்
- உப்பு - ஒரு தேக்கரண்டி.
- புளிக்காய்ச்சல் தயாரிக்க:
- புளி - ஆரஞ்சு பழமளவு
- எண்ணெய் - அரைக்கோப்பை
- கடுகு - ஒன்றரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - இரண்டு தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 5
- வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
- பெருங்காயம் - கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - நான்கு தேக்கரண்டி
செய்முறை
- முதலில் அரிசியை வேக வைத்து உதிரி உதிராக வடித்து ஆற வைக்கவும். புளியை சுடுதண்ணீரில் ஊற விடவும்.
- பொடிக்குத் தேவையானப் பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
- ஊறிய புளியில் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து அதில் உப்பையும் மஞ்சள் தூளையும் போட்டு கலக்கி வைக்கவும்.
- சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகைப் போடவும், அது பொரிந்தவுடன் முதலில் கடலைப்பருப்பை போடவும்.
- பிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும்.
- அதன்பிறகு வேர்க்கடலை மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து வறுக்கவும்.
- பிறகு அதில் கலக்கி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலக்கி கொதிக்க விடவும்.
- எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்த பிறகு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
-