ஓட்ஸ் கஞ்சி (எடை குறைய)

தேதி: November 18, 2007

பரிமாறும் அளவு: இரண்டு பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (26 votes)

 

ஓட்ஸ் - மூன்று மேசைக்கரண்டி
தண்ணீர் - இரண்டு டம்ளர்
உப்பு - ஒரு பின்ச்
மோர் - இரண்டு டம்ளர்


 

ஓட்ஸை ஐந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து உப்பு போட்டு காய்ச்சவும்.
காய்ச்சி அதில் மோர் சேர்த்து குடிக்கவும்.


உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஓட்ஸ் கஞ்சியை காலையிலும் மாலையிலும் மற்ற எந்த சாப்பாடும் சாப்பிடாமல் நான்கு கப் குடித்தால் எடை உடனே குறையும். டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலை உணவாகும். ஓட்ஸும் இரண்டு ஸ்லைஸ் ப்ரெட்டும் வைத்து சாப்பிடவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் அக்கா நல்ல பயனுள்ள குறிப்பை குடுத்து உள்ளீர்கள்..
எனக்கு ஒரு சந்தேகம்.. தயிர் மோர் குடித்தால் எடை போடும் என்கிறார்களே அது உண்மையா?
ஓட்ஸ்சில் கலந்து குடித்தால் எடை குறையும் என்றால் கண்டிப்பாக அதை செய்து பார்கிறேன்..
என் சந்தேகத்துக்கு பதில் தாருங்கள்..ப்ளீஸ் அக்கா..

jaleela akka

weight kuraiya oats kanchi tips arumai. enaku oru doubt.
kaalai maalai 4 cup oats kanchi saappida solluhirirhal veru entha
saappadum saappida koodathu entu solluhirirhal. appadiyantral
oats kanchi thavira moondru velai unavu matrum veru entha thin pantram
ethuvum saappida koodatha. ethanai naalaiku ithu pola saappidanum.
please enakku velakkam tharavum.

Hi Jaleela Mam,
I am favorite for ur dishes. Now i am planned to reduce my weight. So can u tell me pls how to reduce my weight with using oats within a short period. only oats i have to take or other foods also?

thanks,
poorani.

டியர் பிரிமிதா

தயிர் உடல் எடை கூடலாம் ஆனால் மோர் ஒன்றும் செய்யாது.
இப்ப தான் லோ பேட் தயிர், மோர் எல்லாம் கிடைக்கிறதே.
ஓட்ஸ் சேர்த்து பல உணவுகள் தயாரிக்கலாம், கோதுமை மாவு கலந்து தோசையாகவும் வார்த்து சாப்பிடலாம்.
என்றும் உங்கள்

ஜலீலா

Jaleelakamal

நன்றிங்க அக்கா... என் சந்தேகத்துக்கு பதில் தந்ததுக்கு..
நான் இப்போது எடை குறைப்பதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் அக்கா
இந்த குறிப்பு எனக்கு உதவியாக இருக்கும்..
மீண்டும் உங்களுக்கு எனது நன்றிகள் பல..உடல் குறைய எதாவது டிப்ஸ் இருந்தால் சொல்லுங்களேன் அக்கா..
நான் குழந்தைக்காக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.. டாக்டர் என் எடையை
குறைக்க சொல்லிட்டாங்க அக்கா..

உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் சகோதரி
பிரேமிதா

இன்று ஓட்ஸ் கஞ்சியும் 2 ஸ்ட்ராபெர்ரியும் தான் காலை உணவு. இது வரை கஞ்சி போல வைத்ததில்லை.. கொஞ்சம் ஏலக்காய் போட்டுக்கொண்டேன்..

Thanks

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் என்றைக்கும் காலை சாப்பிடுகிறேன். ரொமப் நல்லது. ஆமாம் ஜலீல்லா மேம் எனக்கு ஒரு டவுட் இந்த சோயா மாவு இந்தியாவில் கிடைக்கிறதா எதாவது ப்ராண்ட் இருக்கா? நான் இதவரை யூஸ் பண்ணியதில்லை. என்ன கலரில் கிடைக்கும்.நன்றி ஜலீலா மேம்

விஜி
நான் சோயா மாவு ஹோல்புட்ஸில் வாங்கினேன்.
Brand : Bobs Red Mills ==> $2.29 USD
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது ஒருகை சோயா மாவும் போடுவேன்... கடலைமாவுடன் சரி விகிததில் சேர்த்து நெய் மைசூர் பாவும் செய்தேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா , விஜி சோயா ரொம்ப நல்லது,
சோயா பால் , மாவு எல்லாம்.

வடை பகோடாவிற்கு கூட பயன் படுத்தலாம் ஆனால்

ஜலீலா

Jaleelakamal

ஜலீலக்கா உங்க குறிப்பில் எனக்கு மிகவும் பிடிச்ச குறிப்பு இது ஏன்னா 2 நிமிஷத்தில் ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் அதுவும் எடையும் குறையும்.நான் மோரில் இஞ்சி,கறிவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு வச்சுட்டு பிறகு ஓட்ஸ் கலந்து குடிப்பேன்..அருமை அருமை

தளிகா ஓட்ஸ் கஞ்சி

ஓ கருவேப்பிலை, பச்சமிளகாயும் சேர்த்து கொள்வீர்களா, பழய சாதத்தில் போட்டு குடிப்பது போல்.
உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
ஜலீலா

Jaleelakamal