தம்ரோட்

தேதி: November 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ரவை - 4 கப்
முட்டை - 5
சீனி - 2 கப்
பட்டர் - 250 கிராம்
ஏலக்காய் - 4
கன்ட்ஸ்டர்ட் மில்க் - ஒரு கப்
பால் பவுடர் - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி அல்லது அல்சா ஒரு தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 15
உப்பு - ஒரு சிட்டிகை


 

முதலில் சீனியை மிக்ஸியில் ஏலம் சேர்த்து நைசாக அரைக்கவும். பின்பு பட்டருடன் அரைத்த சீனியை போட்டு நன்கு பிசையவும்.
பிறகு முட்டையை நன்றாக கலக்கவும், அதில் ஒரு பின்ச் உப்பு, பேக்கிங் பவுடர் போட்டு நன்றாக கலக்கவும்.
பின்பு பட்டரில் ரவையை போட்டு பிசையவும், மேலும் அதில் பால் பவுடர், கன்ட்ஸ்டர்ட் மில்க், மற்றும் கலக்கிய முட்டை, ஒடித்த முந்திரி ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கேக் செய்யும் தட்டில் சிறிது வெண்ணெய் தடவி ஊற்றி 180 டிகிரி சூடு செய்த அவனில் வைத்து 30 நிமிடம் பேக் செய்யவும்.


அவரவர் அவனுக்கு ஏற்றாற் போல் செட் செய்துக் கொள்ளலாம். அவன் இல்லாதவர்கள் ஒரு தவாவில் 3 அங்குல உயரத்திற்கு மணலை பரத்தி அதில் இந்த கேக் பாத்திரத்தை வைத்து கிளறவும் கட்டியாக வரும் போது அதன் மேல் மூடி போட்டு அதன் மேல் நெருப்பு வைத்து வேக விடவும். மேலே நெருப்பு வைக்கும் போது கீழ் இருக்கும் நெருப்பை குறைக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அலைக்கும் சலாம்(வரஹ்)
நலமாக இருக்கிறீர்களா?வீட்டில் மெஹர் மேடம் நலமா?உங்கள் இருவர் பெயரும் என் குடும்பத்தில் இருக்கும் பெயர்!உங்கள் பெயர் தான் என் மாமனார் பெயர்.இங்கு அவர்கள் ஃபேமிலி பெயர் சொல்லி தான் அழைப்பர் ஆக இங்கு என்னை offichiyala மேடம் சுல்தான் என்றே அழைப்பர்.அப்புறம் இந்த அல்சா என்பது பேக்கிங் பவுடர் தான் ஃப்ரான்ஸ்சில் இந்த பெயரில் கிடைக்கிறது.முயற்ச்சியுங்கள்,திருவினையாகும்!மேலும் அருசுவைய்யில் அதிகம் மன்றத்தில் பங்கு கொள்ள முடியவில்லை என்பது உண்மைதான்!குறிப்புகளும் ஆமை வேகத்தில் தான் அளித்து வருகிறேன்.நேரமின்மை மட்டுமல்ல சில நேரத்தில் டைப் பண்ணுவதர்க்கு சோம்பேரித்தனமும் கூட!உங்கள் மேடம் குடுத்துவைதவர்கள் தட்டச்சுக்கு தாங்கள் இருக்குறீர்கள்!முடியும் போது நானும் மன்றத்தில் கலந்துகொள்வேன்,மேலும் என்னை நோக்கி தொடுக்க படும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்!என் பார்வையில் படாத பதிவுகள் என் கவணத்திர்க்கு வராமல் போய்விடுகிறது.மேலும் தங்களுக்கு சமையலில் இருக்கும் ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது!அதிகமாக வெளிநாட்டுக்கு போகும் ஆண்கள் பெண்களைவிட நன்றாக சமைக்க கற்றுக்கொள்கிறார்கள் என்பது உண்மை தான்!ஆனால் அருசுவைய்யில் தாங்கள் தான் ஆண்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்! வஸ்ஸலாம்!

hi rasiyaa
planning to make ur dumroot.i had this long time back and searching for the recipe.have some doubt in the measurements.since iam in usa the cup we use here is like 1cup=235ml or8oz. do you use thesame measures,because its different from country to country.

eagerly waiting for ur reply.
thanks .

ஸாரி,நான் இப்போ தான் பார்த்தேன்!இதர்க்கு ரைஸ் குக்கர் அளவு எடுத்துக்கொள்ளலாம்,செய்து பார்த்து சொல்லுங்கள்!

Dear Rasia,
Thanks for your receipe. I have clarification on the ingredient. what is constard milk ?
Is it condensed milk or some thing else. kindly clarify as im going to try this recipe this week. thanks for reply

Sai.