பட்டாணி பிரட்டல்

தேதி: November 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பட்டாணி - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 4
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - 3 சில்
பூண்டு - 3 பல்
எண்ணெய் - 4 தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கசகசா - தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
அன்னாசிப்பூ - சிறிது


 

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். குக்கரில் உப்பு போட்டு ஒரு விசில் வைத்து இறக்க வேண்டும்.
சோம்பு, சீரகம், கசகசா, பூண்டு, தேங்காய் போன்றவற்றை மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ தாளித்து, வெங்காயம், தக்காளி, நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
பிறகு பட்டாணி, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் அரைத்த விழுதை சேர்த்து அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி பிரட்ட வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மிகவும் நன்றாக இருந்தது saraswathi madam