பருப்பு உருண்டைக்குழம்பு

தேதி: November 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
புளி - எலுமிச்சையளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
சீரகம், சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி


 

துவரம்பருப்பை ஊற வைக்க வேண்டும். பாதி வெங்காயத்தையும், பூண்டையும் மிகப்பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
பருப்பிலிருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு அரைக்கவேண்டும். பருப்புடன் நறுக்கியவற்றை சேர்த்து உருண்டை பிடித்து வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை போட்டு பொரிந்தவுடன், மீதி வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி, புளியை 4 கிளாஸ் தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.
தேங்காயை நைசாக அரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். ஒவ்வொரு உருண்டையாக போட்டு வெந்தவுடன் இறக்கவும். பருப்பு உருண்டைக்குழம்பு தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சகோதரி இன்று உங்க பருப்பு உருண்டைக் குழம்பு செய்தேன் எதிர்பார்த்த படியே மிகவும் சுவையாக இருந்தது. குறிப்பில் சீரகமும் சோம்பையும் எப்படி சேர்க்க வேண்டும் என்பது விடுபட்டுள்ளது கவனிக்கவும், நான் பருப்புடன் சேர்த்து இரண்டு பச்சை மிளகாயும் வைத்து அரைத்துக் கொண்டேன்.சுவையான குறிப்பு தந்தமைக்கு மிக்க நன்றி.

மிகவும் நன்றாக இருந்தது மேம்!!