பராசாப்பம்

தேதி: November 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரைக்க:
பச்சரிசி - இரண்டு ஆழாக்கு
உளுந்து - கால் ஆழாக்கு
தேங்காய் - அரை மூடி
வதக்கி கலக்க:
கீமா - கால் கிலோ
வெங்காயம் - மூன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
கறிவேப்பிலை - அரை கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி (கீமாவை சுருட்ட)
தேங்காய் எண்ணெய் - பராசாப்பம் சுட்டெடுக்க


 

அரிசி உளுந்து இரண்டையும் முன்று மணி நேரம் ஊற வைத்து தேங்காயை கெட்டியாக பால் எடுத்து அதில் அரிசி உளுந்தை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம்.
தனியாக சட்டியில் கொத்திய கறியை(கீமா) போட்டு வதக்கவும்.
கொஞ்சமாக எண்ணெய் விட்டு முதலில் கீமாவில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தக்காளி சேர்த்து கலக்கி ஒரு முறை வதக்கியதும் பொடியாக நறுக்கின வெங்காயம் பச்சை மிளகாயை சேர்ர்த்து வதக்கவும். வெங்காயம் ரொம்ப வேக வேண்டாம். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்த மாவில் கலக்கவும்.
இப்போது இரும்பு வாணலியில் அல்லது ஆப்ப சட்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு ஒரு கரண்டி அளவு மாவை ஊற்ற வேண்டியது ஆப்பத்திற்கு சுழற்றுவது போல் சுழற்ற வேண்டாம். அப்படியே கெட்டியாக நடுவில் ஊற்றி மூடி போடவும்.
இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.


இஸ்லாமிய இல்லங்கலில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்கு செய்து கொடுக்கும் ஒரு சூப்பர் டிபன்.
இதற்கு தொட்டு கொள்ள கோழி குருமா நல்ல பொருத்தமாக இருக்கும். கூட பாதாம் பால்.

மேலும் சில குறிப்புகள்