புடலங்காய் பொரியல்

தேதி: November 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

புடலங்காய் - 250 கிராம்
3/4 பதம் வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப்
தேங்காய்ப்பூ - கால் கப்
வெங்காயம் - ஒன்று
சிவப்பு மிளகாய் - 4
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

புடலங்காயை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிசறி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், கிள்ளிய மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி, புடலங்காயை பிழிந்து போட்டு சிறு தீயில் கிளறவும்.
புடலங்காயில் இருக்கும் மஞ்சள் தூள் தண்ணீரை கீழே ஊற்றவும். காயில் தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு அதில் வேகவைத்த துவரம் பருப்பு, தேங்காய்ப்பூ போட்டு கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்