வேப்பிலைக் கட்டி

தேதி: November 20, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காம்பு, நரம்பு நீக்கிய தளிர் இலைகள்
நாரத்தை இலை - 3 கைப்பிடி
எலுமிச்சை இலை - 1 கைப்பிடி
மிளகாய் வற்றல் - 8
ஓமம் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

மிளகாய் வற்றல், உப்பு இரண்டையும் லேசாக வறுத்து ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
இலைகளையும் சேர்த்து அரைத்து உருட்டி காற்று புகாத பாட்டில்களில் போட்டு வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெயந்தி மாமி..! நலமா..? உங்களுடைய வேப்பிலைக்கட்டி செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. முக்கியமாக வயிற்றுக்கு இதமாக இருந்தது. இந்த குறிப்பு எங்கு கிடைக்கும் என்று ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். எதெச்சையாக கண்ணில் பட்டது. நன்றி மாமி..!! குழந்தைகளுக்கும் ரொம்ப பிடித்தது. இந்த மாதிரியான அதிகம் பிரபலமாகாத பாரம்பரியமான நல்ல குறிப்புகளை தொடர்ந்து எழுதுங்கள்.

நிறைய குறிப்புகள் கொடுக்க வைத்திருக்கிறேன். இனி போட்டோவுடன் தான் கொடுக்கவேண்டும் என்றிருக்கிறேன். அதனால்தான் தாமதம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

இன்று ஜெயந்தி மாமியின் மோர்க்களி செய்தேன். சுவையாகவும், வயிற்றுக்கு இதமாகவும் இருந்தது. வேப்பிலைக்கட்டி முன்பே செய்து பார்த்து இருக்கிறேன். பின்னூட்டம் கூட அனுப்பியதாக நினைவு. அதன் ருசியும் வித்தியாசமாகவும், செய்முறை ஈசியாகவும் இருந்தது.
நல்ல சமையலுக்கு இலக்கணம் இன்க்ரடியன்ட்ஸ் கம்மியாகவும், செய்முறை ஈஸியாகவும், சிக்கனமாகவும், நல்ல சத்துள்ளதாகவும், அதே நேரத்தில் வாயிக்கு ருசியாகவும் இருக்கவேண்டும் என்பது என்னுடைய கருத்து. அந்த வகையில் ஜெயந்தி மாமியின் சமையலும் இருக்கிறது.

எனக்கொரு சந்தேகம். இதற்கு புதிதாக‌ முளைத்திருக்கும் செடிகளில் உள்ள‌ இலைகளை பயன்படுத்தலாமா? இங்கு இந்த‌ இலைகள் கிடைப்பது கொஞ்ச‌ம் கடினம். எங்கள் வீட்டில் தொட்டியில் செடிகள் உள்ளன‌ (அது எலுமிச்சையோ அல்லது சாத்துக்குடியோ தெரியவில்லை) பயன்படுத்தலாமா? தயவுசெய்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அன்புடன்
ஜெயா