எண்ணெய் காய் குழம்பு

தேதி: November 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் (பொடியானது) - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பல்
தக்காளி - 2
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரன்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
[அல்லது]
சாம்பார்பொடி - 5 தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.
அதில் நான்காக கீறிய கத்தரிக்காயை போட்டு வதக்கி, 5 நிமிடம் கழித்து 3 கிளாஸ் தண்ணீரில் புளியைக்கரைத்து ஊற்றி, பொடிகளையும், உப்பையும் போட்டு கொதிக்கவிடவும்.
கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு, எண்ணெய் மிதந்து மேலே வந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்