வெண் பொங்கல்

தேதி: November 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

பச்சரிசி - ஒரு ஆழாக்கு
பாசிப்பருப்பு - அரை ஆழாக்கு
எண்ணெய் - 50 கிராம்
நெய் - 2 ஸ்பூன்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் குக்கரில் 4 ஆழாக்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 3 விசில் விட்டு குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு ஒன்றிரண்டாக தட்டிய மிளகு, சீரகத்தை போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையைப் போட்டு, முந்திரி சேர்த்து, வேகவைத்த பொங்கலை போட்டு நன்கு கிளறி நெய்யையும், கொத்தமல்லித்தழையும் தூவி இறக்கவும்


முந்திரி தேவையென்றால் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்