Ungalukku oru challenge - ofcourse in preparing new recipe

Please let me know the recipes to cooking the following
( it need not include all the below even single recipe for one is enough)

1) Broccoli Rabe ( the tender brockli with its leaves)
2) Dill Leaves ( sombu ilai )
3) raw pappaya

ila

பப்பாளிக்காய் கூட்டு

ஹாய் இலா,
நான் www.arusuvai.com/tamil/node 4920 பப்பாளிக்காய் கூட்டு ஏற்கெனவே கொடுத்திருக்கேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

எனக்கும், இந்த dhil leaves வெச்சு பண்ர ஏதாவது ஐடெம் எங்கிருக்குன்னு சொல்லுங்க்களேன்.

தில் இலைகள்னா சோம்பு இலையா? இப்ப தான் தெரியும் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

கேரட்,உருளை யை தனிதன்யாக உப்பு போட்டு வேக வெச்சுடுங்க...அதனுடன் நறுக்கிய லெட்டஸ் ,மிகவும் பொடியாக நறுக்கிய டில் இலைகள் 1/2 கப் , 3 இலை புதினா பொடியாக நறுக்கியது, கொஞ்சம் எலுமிச்சை சாறு, ஆலிவ் என்னை இதையெல்லாம் கலந்து சாலடாக சாப்பிட வேண்டியது தான் சுவையாக இருக்கும்.
மீன் சாலட் செய்யுங்கள் பிறகு மீன் வருவல் கூட புடிக்காது..நல்ல சுவையாக இருக்கும்.
1/2 கிலொ ஹமூர் மீன் ஃபில்லட்டில் உப்பு,எலுமிச்சை நீர் சேர்த்து, பொடித்த மல்லி விதை 1/4 ஸ்பூன் ,இஞ்ச்ய் பொடியாக நறுக்கியது 1/2 ஸ்பூன் சேர்த்து பிறட்டி 1 மனிநேரம் கழித்து க்ரில் செய்யவும்...இது 15 நிமிடம் க்ரில் செய்தால் வெந்து விடும்..பிறகு சூடாரியபின் இதில் வேகவைத்து தோலுரிக்கப்பட்ட சிவப்பு குடைமிளகாய் பொடியாக நறுக்கியதும், செலெரி ச்டிக் நறுக்கியதும், ஸ்ப்ரிங் ஆனியன் நறுக்கியதும், உப்பு,எலுமிச்சை நீர், ஆலிவ் என்னை 3 ஸ்பூன் எல்லாம் கலந்து மீனை துண்டு துண்டாக போட்டு பிறட்டி பரிமாறவும்...சுவையாக இருக்கும்.

சூப், சாலட், டிப்பிங்க் சாஸ் எதுவென்றாலும் அதில் ஒரு டேபுள் ஸ்பூன் அளவுக்கு தில் இலைகளை பொடியாக நறுக்கி அவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.(கொத்து மல்லி இலையை தூவுவது போல் சமைத்து முடித்தவுடன் அதனுடன் சேர்க்க வேண்டும்)

உருளையை ரோஸ்ட் செய்தவுடன் அதன் மேல் தூவலாம்.

1 கப் தயிரில் துறுவிய வெள்ளரி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், 1 டேபுள் ஸ்பூன் தில் இலைகள், உப்பு சேர்த்து ரைத்தா போல் சாப்பிடலாம்.

தில் இலைகளை பொடியாக நறுக்கி பருப்பு வடை, பகோடா போன்ற ஸ்னாக்சுகள் செய்யும் போது அதில் கொத்தமல்லிக்கு பதிலாக சேர்த்து செய்யலாம். வித்தியாசமான சுவையுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

புரோக்கலி ரேப்பை பொடியாக நறுக்கி ஸ்பைனாச் கீரைப் பொரியல் செய்வதுப் போல் செய்யலாம்.

கடாயில் ஆலிவ் ஆயில் சிறிது விட்டு, அதில் மூன்று பல் நறுக்கிய பூண்டு, red pepper flakes/ pepper powder கால் டீ ஸ்பூன், நறுக்கிய broccoli rabe (thick ஆனா stems-ஐ தூக்கி போட்டு விட வேண்டும் ) வதக்கி கால் கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து நீர் எல்லாம் வற்றியபின் இறக்கி சிறுது லெமன் ஜுஸ் கலந்து சாப்பிடவும்.

ஏதாவது பாஸ்தாவுடன் (cook broccoli rabe with 1 cup vegetable/chicken broth and remove when 1/2 cup of liquid is still there ) cheese சேர்த்தும் சாப்பிடலாம்.

Hi
Thanks for all your ideas. I made raw pappaya and carrot and little pasiparuppu pottu oru poriyal seithen. It came out very well.

I will try the others this weekend.

Thanks
ila
Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்