பாஜி

தேதி: November 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - நான்கு
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - மூன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - மூன்று பல்
துருவிய இஞ்சி - ஒரு மேசைக்கரண்டி
முந்திரி - மூன்று
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை மண் போக கழுவி நான்காக அரிந்து மூழ்கும் அளவு குக்கரில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு மஞ்சள் பொடி போட்டு நான்கு விசில் விட்டு இறக்கவும்.
வெந்ததும் எடுத்து தோலை உரித்து மசித்து கொள்ளவும்.
வாணலியை காய வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, முந்திரி பருப்பு பொடியாக நறுக்கி போடவும்.
பொரிந்ததும் பூண்டை தட்டி போடவும். பிறகு கறிவேப்பிலை போட்டு வதக்கி வெங்காயத்தை போட்டு வதக்கி மூன்று நிமிடம் சிம்மில் வைக்கவும்.
பிறகு தக்காளி, பச்சை மிளகாய் கீறி போட்டு இஞ்சி துருவல் சேர்த்து கிளறி மிளகாய் தூள், உப்பு தூள் போட்டு நல்ல வதக்கி மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நல்ல பிரட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.


பூரிக்கு ஏற்ற பாஜி இது.

மேலும் சில குறிப்புகள்