தேவையானப் பொருட்கள்
- மாங்காய் - 1
- சின்ன வெங்காயம் - 10
- பச்சைமிளகாய் - 4
- தேங்காய்துருவல் - 1/4 கப்
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- வெல்லம் - சிறிய துண்டு
- பெருங்காயம் - சிறிதளவு
- புளி தண்ணீர் - சிறிதளவு
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுந்து - 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
|
செய்முறை
- மாங்காயை தோல் சீவி மெல்லிய சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தேங்காயையும், சீரகத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுந்து போட்டு பொரிந்தவுடன் கீறிய பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
- பின் மாங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
- வதக்கிய பின் சிறிது தண்ணீர், சிறிதளவு புளி தண்ணீர், மஞ்சள்தூள் போட்டு வேகவிடவும்.
- மாங்காய் வெந்த பின் தட்டிய பெருங்காயம், அரைத்த விழுது, உப்பு வெல்லம் போட்டு கிளறி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- கடைசியில் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
|
வழங்கியவர்
திருமதி முத்துலெஷ்மி
சமீபத்தியக் கருத்துக்கள்
3 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
11 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -