சேம்பு இலை பருப்பு உசுலி

தேதி: November 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 200 கிராம்
மிளகாய் வற்றல் - 6
உப்பு - தேவைக்கு
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
கடுகு - ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சேம்பு இலை - தேவைக்கு


 

துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து உப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரவென்று அரைக்க வேண்டும்.
சேம்பு இலையை அலம்பி விரித்து அரைத்த துவரம் பருப்பை சிறிது நீர் தெளித்து கலந்து, இலையில் கனமாக தடவி இலையை சுருட்டி இட்லி பானையில் ஆவியில் வேக வைக்கவும்.
வெந்தபின் எடுத்து சின்ன சின்னதாக கட் செய்யவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து கட் செய்த உசிலிகளை போட்டு வதக்கவும்.
கார குழம்புக்கு பெஸ்ட் காம்பினேஷன் இந்த சேம்பு இலை உசிலி.


மேலும் சில குறிப்புகள்