போன்லெஸ் சிக்கன் ஃப்ரை

தேதி: November 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலும்பு நீக்கிய கோழி - அரை கிலோ
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
கார்ன் ஃப்ளார் [சோளமாவு] - 2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
முட்டை (வெள்ளைக்கரு) - ஒன்று
எண்ணெய் - வறுத்து எடுப்பதற்கு தேவையான அளவு
கேசரி கலர் - தேவைப்பட்டால்


 

கோழியில் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், வினிகர், சோயா சாஸ், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு, கார்ன் ஃப்ளார் போட்டு பிசறி, ஃப்ரிட்ஜில் (freezer) ஃப்ரீசரில் வைக்கக்கூடாது.
அரைமணி நேரம் வைத்து எடுத்து எண்ணெய்யை காயவைத்து 4 அல்லது 5 துண்டங்களாக போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் சரஸ்வதி
மசாலா போட்டு ஃபிரிட்ஜில் வைக்கனுமா (அ) பிரீஜரில் வைக்க்கனுமா, பிரீஜரில் வைத்தால் ஐஸ் விட்டு பொரிக்கா ரொம்ப நேரம் ஆகும்.
ஜலீலா

Jaleelakamal

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
dear jaleela,
ப்ரிஜரில் வைக்கக்கூடாது என்ற வார்த்தைகள் விட்டு போனதை கவனிக்க தவறிவிட்டேன். கண்டுபிடித்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
சரஸ்வதி

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

டியர் சரஸ்வதி
எப்படி இருக்கீங்க, 99 ஐ ஜெட் வேகத்தில் கொடுத்து விட்டு இன்னும் ஒன்றுக்கு என்ன தயக்கம். சீக்கீரம் கொடுங்க.
உங்க ரெசிபி எல்லாம் படித்தேன் நல்ல இருக்கு.
ஜலீலா

Jaleelakamal