அகத்திக்கீரை கூட்டு

தேதி: November 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அகத்திக்கீரை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 10
வரமிளகாய் - 3
சீரகம் - அரை தேக்கரண்டி
தேங்காய் - 3 சில்
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

ஒரு கடாயில் எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், வரமிளகாய், கீரையைப் போட்டு வதக்கி, அரிசி களைந்த தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். தேங்காயை அரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.


வாய்ப்புண் வந்தவர்கள் சாறை ஊற்றி சாப்பிட்டால் சீக்கிரம் ஆறிவிடும். அகத்திக்கீரை உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் நல்ல மருந்து.

மேலும் சில குறிப்புகள்