மணத்தக்காளி (அ) மிளகுதக்காளிக்கீரை கூட்டு

தேதி: November 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீரை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 10
பச்சைமிளகாய் - 5
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பாசிப்பருப்பு - 100 கிராம்
தேங்காய் - 2 சில்
உப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 2


 

பாசிப்பருப்பை நன்கு வேகவைக்கவும். கீரையை நறுக்கி பருப்பில் போட்டு, சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வேகவிடவும்.
வெந்த பிறகு தேங்காயை அரைத்து ஊற்றி, ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் போட்டு தாளித்து கொட்டவேண்டும்.


இதுவும் வாய்ப்புண்ணை ஆற்றும். உஷ்ணத்தை குறைக்கும்.

மேலும் சில குறிப்புகள்