மிளகு கோழி

தேதி: November 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - மூன்று
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரன்டி
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - ஒரு இன்ச் அளவு துண்டு இரண்டு
கிராம்பு - மூன்று
ஏலம் - இரண்டு


 

சிக்கனை நன்கு கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாடை போனதும் தக்காளி, பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி தழை போட்டு வதக்கவும்.
மிளக்காய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள் சேர்த்து வதக்கி சிக்கனை சேர்த்து நல்ல கிளறி பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு மூன்று விசில் விட்டு இறக்கி இரண்டு பத்தை தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.
சூப்பர் பெப்பர் சிக்கன் ரெடி.


பனிகாலங்களில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம், சலி ஜலதோஷத்திற்கும் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.
இதை ப்ரட் ரைஸ், ப்ளையின் ரைஸ், ரொட்டி போன்றவைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கு.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஜலீலா,
உங்க மிளகு கோழி நேற்று செய்தேன். ரொம்ப நல்ல இருந்தது. என்னுடைய கணவருக்கும் மிகவும் பிடித்து விட்டது. ரொம்ப தேங்க்ஸ்.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி,

ரொம்ப நன்றி சுஜி

இது குளிருக்கு தொண்டைக்கு நல்ல இருக்கும், சளி சமயத்தில் செய்து சாப்பிடலாம்.
இதே மாதிரி மட்டனிலும் செய்யலாம், வெஜ் டேரியன் சாப்பிடுபவர்கள் உருளை , சேனை, பீன்ச் போன்றவற்றில் செய்து சாப்பிடலாம்.
செய்து பார்த்தாதற்கு நன்றி
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா உங்க தக்காளி சூப்பை ஒருமுறை செய்தது தான் அதுக்கப்புரம் தக்காளி என்ன பாத்தலே பயந்துக்குது அவ்வளவு முறை சூப் வெச்சாச்சு இப்ப கூட சூப் குடிச்சுட்டே டைப் பன்றேன்..அவ்வளவு ருசி அதும் குளிருக்கு ஆஹா

என் பசங்களுக்கு சூப் என்றால் ரொம்ப பிடிக்கும் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு சூப் செய்து விடுவேன்.
ரொம்ப நன்றி தளிக்கா
ஜலீலா

Jaleelakamal

மிளகு கோழி!!!
அருமையா வந்தது.. ரசம் சாதத்துடன் சாப்பிட நல்ல காம்பினேஷன்.. சூப்பர் ஜலீலாக்கா!!!

"Success is to be measured not so much by the position that one has reached in life as by the obstacles which he has overcome."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

டியர் இலா மிளகு கோழி பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
ஜலீலா

Jaleelakamal