ஆப்பம்

தேதி: November 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 2 கப்
புழுங்கலரிசி - 2 கப்
உளுந்து - அரை கப்
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் - ஒன்று


 

இரண்டு அரிசியையும் ஒன்றாகவும், உளுந்து, வெந்தயத்தை ஒன்றாகவும் ஊறப்போட வேண்டும்.
தனித்தனியாக ஆட்டி, உப்புச்சேர்த்து ஒன்றாக கரைத்து ஒரு இரவு புளிக்கவிட்டு காலையில் ஆப்பச்சட்டியில் ஊற்றி, மூடி சிறு தீயில் வேகவிடவும்.
தேங்காயில் பாலெடுத்து, 7 ஏலக்காய் தட்டிப்போட்டு, தேவையான சர்க்கரை சேர்த்து ஆப்பத்தில் ஊற்றி சாப்பிடலாம்.
ஆப்பம் ஊற்றும் முன் மூன்றாவது தேங்காய்ப்பாலை ஊற்றி, ஆப்பச்சோடா, உப்பு ஒரு துளி விட்டு கரைத்து ஊற்றவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி அக்கா ஆப்பம் செய்தேன்.ஈசியாகவும் சுவையாகவும் இருந்தது.மிக்க நன்றி
சுரேஜினி

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் ஆப்பம் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"