வெண்டைக்காய் வறுவல்

தேதி: November 22, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - கால் கிலோ
தாளிக்க:
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு மூன்று ஆர்க்கு
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி


 

வெண்டைக்காயை கழுவி விட்டுதான் அரியனும். இல்லையென்றால் கொழகொழ என வரும்.
கழுவி அரிந்து வைக்கவும். ஒரு சென்டிமீட்டர் அளவு வெட்டி கொள்ளவேண்டியது.
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெண்டைக்காயை போட்டு நல்ல இரண்டு நிமிடம் உப்பு போட்டு வதக்கவும்.
வதக்கி சாம்பார் பொடி தூவி மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி இரன்டு நிமிடம் மூடி போட்டு வேகவிட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்