சுறா மீன் சால்னா

தேதி: November 22, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுறா மீன் - அரை கிலோ + கால் கிலோ
மீனில் போட்டு கொதிக்கவைக்க:
வெங்காயம் - மூன்று
தக்காளி - மூன்று
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகு தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - இரண்டு தேக்கரண்டி (வறுத்து பொடித்தது)
தனியாதூள் - இரண்டு மேசைக்கரன்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பூண்டு - ஐந்து பெரிய பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கடைசியில் அரைத்து ஊற்ற:
தேங்காய் - அரை மூடி
கொத்தமல்லி தழை - சிறிது மேலே தூவ


 

மீனை நல்ல சுத்தம் செய்து முக்கால் கிலோவும் (கால் கிலோ புட்டு செய்ய) அதில் மேலே சொன்ன கொதிக்க வைக்க வேண்டிய பொருட்களை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும் போது தீயை கொஞ்சம் குறைத்து வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் கொதிக்கும் போது பொங்கும்.
மீன் நல்ல வேக வேண்டும்.
வெந்ததும் மூன்றில் ஒரு பாகத்தை முள் இல்லாமல் எடுத்து வைக்கவும். அது சுறா புட்டு செய்ய.
தேங்காயை அரைத்து ஊற்றவும்.
தேங்காயை அரைத்து ஊற்றி கொதிக்க விடவும். தேங்காய் வாசனை அடங்கியதும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டி கொத்தமல்லி தழை தூவவும்.


இது குளிர் நேரத்தில் சாப்பிட்டால் நல்லது. பிள்ளை பெற்றவர்களுக்கும் சலி ஜலதோஷத்திற்கும் நல்லது.
இதில் புளி ஊற்ற கூடாது ஊற்றினால் எடுபடாது. தயிரும் சேர்க்க கூடாது. சுறா புட்டு அடுத்த ரெசிபியில்

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் பஜீலா இந்த டைப்பிலும் செய்யலாம் மீன் குருமா
ஜலீலா

Jaleelakamal

டியர் ஜலீலா அக்கா ரொம்ப நன்றீ.புதிது இன்ஷா அல்லாஹ்,செய்து விட்டு சொல்கிரேன்.
Be Faith in God,he will Guide us the Right Path

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

டியர் பஜீலா உங்களுக்கு மன்றத்தில் அரட்டை அடிக்கனும் என்றால் ஓப்ப்பன் செய்ததும் முகப்பு பகுதியில் கீழே மன்றம் என்று இருக்கும் அதில் போய் பாருங்கள் எந்த பகுதியில் பேச பிடிக்குதோ அங்கு பேசுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலிலா அக்கா உடனே வாங்க சுல்தான் இப்ராகிம் மீன் உள்ளது அதை என்ன செய்தால் நல்லா இருக்கும்,ஒரு நல்ல மீன் குழம்பு வேனும் சொல்லுங்க பீளிஸ்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஜலீலக்காவின் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது .அக்கா தான் பார்த்துக் கொள்கிறார்கள் இனி அனேகமா ஒரு ரெண்டு வாரம் ஆளை காணாது ரேனுகா.
சுல்தான் இப்ராஹிமில் குழம்பு அவ்வளவு நல்லா இருக்காது.வறுத்தால் ரொம்ப அருமையா இருக்கும்.

ரேனுகா ஜலீலக்கா குறிப்பிலேயே சங்கரா மீன் சால்னா உண்டாம் அதை செஞ்சு பாருங்க

தேங்ஸ் தளிகா,சொன்னதுக்கு,நான் நேற்றே செய்துட்டேன்,சால்னா மீன் பிரை என்று இருந்தது.

பொண்ணு எப்படி இருக்கா?இன்னிக்கு ஸ்கூல் அனுப்பினீங்களா?

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா எல்லா மீனிலும் மீன் குழம்பு வைக்கலாம், அது நாம் செயும் விதத்தில் இருக்கு,
மீன் உடையாமல் செய்யனும் அவ்வளவு தான் சுல்தான் இப்ராஹிம் முள் அதிகமாக இருக்கும் நல்ல மொருகலாக பொரிக்கனும், குழம்பிற்கு வெரும் த‌லை மட்டும் போட்டால் கூட போதும்,அடியில் முள் தங்கிவிடும், கிளறாமல் மேலோடு எடுக்கனும்

Jaleelakamal