முழு பாவக்காய் கறி

தேதி: November 22, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாவக்காய் -- 1/4 கிலோ
சின்ன வெங்காயம் -- 1/2 கப்
பச்சைமிளகாய் -- 2 என்னம் (நீளமாக அரிந்தது)
கறிவேப்பிலை -- ஒரு இனுக்கு
எண்ணைய் -- 4 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 ஸ்பூன்
கல் உப்பு -- ஒரு ஸ்பூன்


 

வாணலியை காயவைத்து உப்பு போடவும் . உப்பு பட பட வென பொரிந்தவுடன் பாவக்காயை நன்கு கழுவி அதில் போடவும். 3 நிமிடம் அப்படியே உப்புடன் வறுக்கவும். பின் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
வெந்தபின் வடிகட்டி தனியாக வைக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து பின் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின் வெந்த பாவக்காயை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
அதன் மீது மீதி உள்ள எண்ணையை சேர்க்கவும்.
தேவை எனில் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
முழு பாவக்காய் கறி ரெடி.


மேலும் சில குறிப்புகள்