பாவக்காய் வறுவல்

தேதி: November 22, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

நீளமான பாவக்காய் -- 1 என்னம் (பெரியது எனில் 1/4 கிலோ)
சின்ன வெங்காயம் -- 1/2 கப்
பச்சைமிளகாய் -- 2 என்னம் (நீளமாக அரிந்தது)
சாம்பார் பொடி -- 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- ஒரு இனுக்கு
எண்ணைய் -- 4 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 ஸ்பூன்
கல் உப்பு -- ஒரு ஸ்பூன்


 

பாவக்காயை நன்கு கழுவி வட்ட வட்டமாக வெட்டவும்.
வாணலியை காயவைத்து உப்பு போடவும் . உப்பு பட பட வென பொரிந்தவுடன் பாவக்காயை போடவும்.

3 நிமிடம் அப்படியே உப்புடன் வறுக்கவும். பின் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
வெந்தபின் வடிகட்டி தனியாக வைக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து பின் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின் வெந்த பாவக்காயை அதில் போட்டு வதக்கவும்.
அதனுடன் சாம்பார் பொடியை சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.
4 நிமிடம் அப்படியே வைத்து கிளறி சிறிது சிறிதாக மீதமுள்ள எண்ணையை சேர்க்கவும்.
நன்றாக வறுபட்டு எண்ணை வெளியே வரும் வந்தவுடன் இறக்கிவிடலாம்.
பாவக்காய் வறுவல் ரெடி.


சாம்பார், பருப்பு முதலியவற்றிற்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

tried this dish today.... it came out well... thank u ....

nanriyudan