மாம்பழ மோர்க்குழம்பு

தேதி: November 22, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளிக்காத தயிர் - 1 கப்
நன்கு பழுத்த மாம்பழம் - 1
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டேஸ்புன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிது
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு


 

தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், கடலை மாவு சேர்த்து கடைந்து கொள்ளவும்.
மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி பிசைந்து கொள்ளவும்.
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி தழை சேர்த்து அரைத்து கடைந்த தயிர், மாம்பழம் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி. அதிரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த மாம்பழ மோர்க்குழம்பின் படம்

<img src="files/pictures/aa99.jpg" alt="picture" />