வெள்ளைப்பணியாரம்

தேதி: November 22, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 2 ஆழாக்கு
உளுந்து - 75 கிராம் [1/2 ஆழாக்கில் 3/4]
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
பால் - 50 கிராம்


 

அரிசியையும், உளுந்தையும் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, 2 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
பின்பு நன்கு ஆட்டி உப்புச்சேர்த்து கரைத்து, (மாவில் இட்லிப் பதத்திற்கும், தோசை பதத்திற்கும் இடையான அளவு தண்ணீர் சேர்க்கவேண்டும்).
பால் சேர்த்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தட்டையான கரண்டியால் மாவை ஊற்றி, வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்க வேண்டும்.


செட்டிநாட்டு வீடுகளில் ஒவ்வொரு விசேஷங்களிலும் இந்த பலகாரம் இருக்கும்.
ஒவ்வொரு பணியாரமாக ஊற்றி எடுக்க வேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள காரச்சட்னி சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்