தேங்காய்ப் பொடி - 2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுத்தம்பருப்பு - கால் ஆழாக்கு
கடலைப்பருப்பு - கால் ஆழாக்கு
மிளகாய்வற்றல் - 3
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
கடுகு - கால் தேக்கரண்டி
முற்றிய தேங்காய் - ஒரு மூடி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி


 

தேங்காயை பூப்போல துருவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல், பெருங்காயம், கடுகு, ஆகியவற்றை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் நெய் ஊற்றித் தேங்காய் துருவலைப் போட்டு ஈரப்பதம் போகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
மிக்ஸியை சுத்தம் செய்து, வறுத்து வைத்த சாமான்களுடன் உப்பு சேர்த்து பொடி செய்துக் கொள்ளவும்.
பிறகு, அதனுடன் தேங்காய்த் துருவலையும் வைத்து இரு முறை அரைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்