காம்பினேஷன் மெனு

சகோதரிகளே!....... இந்த சுவாரசியமான த்ரட்- ல் பொருத்தமான உணவு வகைகளை எழுதுங்களேன். உதாரணமாக... சாம்பாருக்கு ஏற்ற வறுவல், காரக்குழம்பிற்கு ஏற்ற பொரியல், குருமாவிற்கு பொருத்தமான வதக்கல். இந்த மாதிரி ஏழு நாட்களுக்கும் ஏழு பொருத்தமான மெனுவை எழுதுங்களேன் சகோதரிகளே!..

ஆப்பம் - தேங்காய் பால்
புளி சாதம் - வடகம்
புளிக்குழம்பு - முட்டைகோஸ் பொறியல்
ரசம் - வாழைக்காய் பொறியல், பரங்கிக்காய் பொறியல், பீன்ஸ்
நூடுல்ஸ் - சாஸ்
தோசை - வெங்காய மசால்
ரவா தோசை - ரசம்

அன்புடன்
பவித்ரா

hi i am meenukarthi. i am from kumbakonam,tamilnadu.the combination of eating is.

aval dosai-kara chutney
drumstick sambar,poricha kuzhambu-potato kara curry
rasam-omelette,fried egg,fried fish
morkuzhambu-valaikkai kara curry
puli kulambu-sutta appalam

i want a help from u all. soon i am going to move to charlotte,nc.
pls tell me anyone there in that place. i want to here some questions from them & also
tell any links for me to know the details of charlotte

meenakarthik

பவித்ரா சிஸ்டர்,

ஆப்பம் - தேங்காய் பால்
புளி சாதம் - வடகம்
புளிக்குழம்பு - முட்டைகோஸ் பொறியல்
ரசம் - வாழைக்காய் பொறியல், பரங்கிக்காய் பொறியல், பீன்ஸ்
நூடுல்ஸ் - சாஸ்
தோசை - வெங்காய மசால்

இதெல்லாம் சரி..

ரவா தோசை - ரசம்

இதுல எதுவும் டைப்பிங் மிஸ்டேக் இல்லையே.. ?!! :-)

உன் காம்பினேஷன் புதுசா இருக்கே?
ரவா தோசைக்கு ரசமா?
அடை---------------- அவியல்.
மோர்க்குழம்பு---------- கொத்தவரை பருப்பு உசிலி.
இட்லி----------------- பொடி எண்ணை, சட்னி, சாம்பார்.
ரசம் சாதத்துக்கு---------- பொரித்த அப்பளம்தான் பெஸ்ட் சாய்ஸ்.
பூரி--------------------- சோலே, ஸ்ரீகண்ட்.
சப்பாத்தி------------------- ,வெஜிடெபிள் குருமா, வெங்காய சட்னி.
புலாவ் வகைகள்------------------ பூந்தி ராய்த்தா, சிப்ஸ்.
புரண்போளி------------------- ஆம்டி(???????????)
மெது வடை--------------- வெள்ளை சட்னி, சாம்பார்.
ப்ரோட்டா---------------------- சாஸ்,வெண்ணை.( எங்க வீட்ல இப்படித்தான்)
தயிர் சாதம் ஊறுகாய், சாம்பார்.
ரவை உப்மா----------------- தக்காளி தொக்கு.
அவல் உப்மா------------------ ஜீனி.
ஜெவ்வரிசி உப்மா---------------- தயிர்+ஜீனி
போரும்னு நினைக்கரேன்

ரவாதோசைக்கு ரசம்....புதுசா இருக்கே பவி :)

எங்க வீட்டு காம்பினேஷன்

ஆப்பம்- கோழிக் குழம்பு அல்லது உருளைக்கிழங்கு மசாலா கறி அல்லது கொண்டைக்கடலை மசாலா குழம்பு

இடியாப்பம்- புளிசேரி அல்லது கோழிக்குழம்பு அல்லது ரெண்டுமே

தீயல்- சௌசௌ அல்லது வெள்ளரிக்காய் பருப்பு கூட்டு, பருப்பு துவையல்

பருப்பு ரசம்- உருளைக்கிழங்கு வறுவல், வெங்காயம் மிளகாய் பச்சடி, முட்டைக்கோஸ் தோரன், மீன் வறுவல்

பால்பாயாசம்- போளி அல்லது பூந்தி

சாம்பார்- கல்யாண அவியல், இஞ்சி தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு வறுவல், சாளை(மத்தி) மீன் அல்லது வாளை மீன் பொரியல்

ரவா தோசை- சாம்பார், பொட்டுகடலை சட்னி

குழாய் புட்டு- வேகவைத்த பச்சைப்பயிறு, பப்படம், பழம், நெய், சர்க்கரை, இட்லி மிளகாய்ப்பொடி

அடை- வெண்ணெய்+வெல்லம், மிளகாய் பூண்டு பொடி+எண்ணெய், தேங்காய் உப்புமிளகு+தயிர்

லெமன் சாதம், புளியோதரை- வறுத்தரைத்த துவையல், அப்பளம், உருளைக்கிழங்கு வறுவல்

சாம்பார்சாதம்- வறுத்தரைத்த துவையல், அப்பளம்

கோதுமை ரவை கஞ்சி- சுட்ட அப்பளம்+ ஏதேனும் துவையல்

வத்தக்குழம்பு- முட்டை முருங்கைக்காய் அவியல், அப்பளம், கொள்ளு துவையல்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எங்க வீட்ல
காம்பினேஷன் மெனு
அடை -- அவியல் -- வெல்லம்
இடியாப்பாம் --- மோர்குழம்பு-- அப்பளம்
புளிசாதம் -- தேங்காய் துவையல் -- வடாம்
சாம்பார் சாதம் -- வெண்டைக்காய் கறி -- அப்பளம்
பாயாசம் -- அப்பளம் அல்லது போளி
மோர்குழம்பு - எண்ணெய் கத்திரிக்காய் கறி
இட்லி -- தேங்காய் சட்னி, கொள்ளு சட்னி, சாம்பார்
தோசை -- நிலக்கடலை சட்னி, பூண்டு சின்ன வெங்காயம் சட்னி
இது மாதிரி லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்

ஆமாம் பவி அது என்ன ரவா தோசை -- ரசம் (புது காம்பினேஷனா இருக்கே?)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எங்க வீட்டு மெனு

சாம்பார் - உருளை - பட்டாணி வறுவல், பீன்ஸ் பொரியல், அப்பளம் (அ) கஞ்சி வற்றல்,புளித் துவையல்
மோர் குழம்பு - சேனைக் கிழங்கு வறுவல், மெது வடை
எண்ணெய் கத்தரிக்காய் காரக்குழம்பு - வெண்டைக்காய் புட்டு, அப்பளம், வற்றல்,பொட்டுக்கடலை துவையல்
காய்கறி குருமா - கோஸ் பொரியல், முட்டை ஆம்லெட்
சிக்கன் குருமா - ஆம்லெட்
கத்தரிகாய் பஜ்ஜி - உருளைக்கிழங்கு சிப்ஸ், கேரட் பொரியல்
தோசை - வெங்காய சட்னி, தக்காளி தொக்கு, நீர் சாம்பார்
இட்லி - தக்காளி தொக்கு, வேர்க்கடலை சட்னி, இட்லி பொடி, வறுத்த கடலை குழம்பு
அடை - புதினா (அ) கொத்துமல்லி சட்னி)
பூரி, சப்பாத்தி - சென்னா மசாலா, உருளை மசாலா, தக்காளி தொக்கு, காய்கறி குருமா, சோயா கிரேவி
புட்டு - வாழைப்பழம், நெய், சர்க்கரை
ஆப்பம் - தேங்காய்ப்பால், குருமா
உப்புமா - தேங்காய் சட்னி, ஊறுகாய்
புளியோதரை, எலுமிச்சை சாதம் - உருளை சிப்ஸ், சேனை (அ) கருணைக்கிழங்கு வறுவல், இறால் தொக்கு

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

டியர் மீனா
நீங்கள் சார்லெட்ச்வில்(என்ட்ரு ஒருஇடம் உன்டு).லில் படிக்க போகிறீர்களா?. அல்லது சார்லெட்கு போகிறீர்களா என்பதை தெரிவிக்கவும்

பலாஃப்ப்ல் செய்வதுபட்ரிய குரிப்பு எந்தform
ல் உள்ள்து

dear vijaya
thank u for ur reply. it is charlotte which is in north carolina.
i am going there within few months.
pls tell me
1.where the indian community is staying,
2.which apartment is best
3.which school is good for my kid who is 4 yrs old near the indian community area.
tell me abt u
thanku

meenakarthik

மேலும் சில பதிவுகள்