புலாவ்

தேதி: November 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசுமதி அரிசி - 2 கப்
காரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பச்சை பட்டணி - 100 கிராம்
எண்ணெய் - 50 மி.லி
பச்சைமிளகாய் - 6
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது


 

அரிசியை 4 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் விட்டு 5 நிமிடம் வைத்து ஆறவிட வேண்டும்.
காய்கறிகளையும், பச்சை மிளகாயையும் மிக பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், காய்களையும் போட்டு சிறு தீயில் வேக விடவும். உப்புச்சேர்க்கவும்.
காய்கள் வெந்தவுடன் மிளகுத்தூள் சேர்த்து கிளறி வெந்த சாதத்தை போட்டு கிளற வேண்டும். கொத்தமல்லித்தழை தூவவும்.


வெந்த சாதத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கிளறினால் உதிரியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்