கொத்தவரங்காய் புளி கூட்டு

தேதி: November 24, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்தவரங்காய் -- 250 கிராம் (நாரெடுத்து பின் நறுக்கியது)
சிறிய வெங்காயம் -- 10 என்னம் (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 3 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி -- 1 டேபிள் ஸ்பூன்
புளி -- ஒரு கோலி அளவு (ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்)
எண்ணைய் -- தேவையான அளவு
உப்பு -- தே.அ


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதனுடன் பச்சைமிளகாய்,கறிவேப்பிலை ,வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும்.
பின் கொத்தவரங்காயை சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் புளி தண்ணீரை சேர்க்கவும்.
புளி தண்ணீர் ஊற்றிய கொத்தவரங்காய் ஒரு கொதி வந்ததும்
அதை 10 நிமிடம் மூடி வைத்து விடவும்.
பின் மீண்டும் கலந்து மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும்.
கொத்தவரங்காய் புளி கூட்டு ரெடி.


மேலும் சில குறிப்புகள்