www.arusuvai.com
அண்டா புர்ஜி
தேவையானப் பொருட்கள்
- வெங்காயம் - 2
- தக்காளி - 1
- முட்டை - 4
- மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
- தனியாதூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - 1/4 தேக்கரண்டி
- எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
- கடுகு - 1/4 தேக்கரண்டி
- உ.பருப்பு - 1/4 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 1 கீத்து
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
- வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்தவுடன்,உ.பருப்பு,கறிவேப்பிலை,வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும்.
- நன்கு வதங்கியவுடன் மஞ்சள்தூள்,மிளகாய்துள்,தனியாதூள்,உப்பு,போட்டு நன்கு வதக்கி முட்டையை அதில் ஊற்றவும்.
- நிமிடத்துக்கு ஒரு முறை கிளறவும்.ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி பொட்டு இறக்கவும்.
- இதனை இட்லி,தோசையுடன் பரிமாறலாம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்கள் |
10 நிமிடங்கள் |
10 நிமிடங்கள் |