முருக்கு

சலாம்,நைய் முருக்கு எப்படி பண்ணுவது??சாப்டாக,உடயாமல் வரனும்..நான் முன்ன,பின்ன முறுக்கு பண்ணியது இல்லை...எனக்கு புரியும்படி சொல்லுன்க..

ஹாய் மர்ழியா,
என்னுடைய குறிப்பில் முறுக்கு செய்முறை உள்ளது. சுலபமாக செய்யலாம். சாதாரண எண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெயில் சுட்டால் நீங்க நினைக்கிற மாதிரி வரும். பச்சரிசி காய வைத்து அரைத்து செய்யும் வேலை இல்லாமல் கிரைண்டரில் அரைத்து செய்யலாம். ரொம்ப சாப்டாக வரும், பொட்டுக்கடலை அளவு சரியாக போட்டால் உடையாமல் வரும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி மேடம்,நீங்கள் அனுப்பிய குறிப்பை நான் பார்க்க வில்லை...இப்பொலுதுதான் பார்தேன்..பிரின்ட் எடுதுட்டேன் நன்றி...உன்க
ல் அட்வான்ஸ் வாழ்த்துக்கலுக்கும் ரொம்ப நன்றி..123 கிரீட்டிங்ஸ் சைட் எனக்கு யேர்கனவே தெரியும்..ஆனாலும் எனக்காக அனுப்பியதுக்கு மீண்டும் ...நன்றி......நன்றி.....நன்றி...மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்புள்ள அனைவரும்,
மைதா மாவு வைத்து டைமன்டு வடிவத்தில் பொரித்து பின் சர்க்கரை பாகில் போட்டு செய்யும் இனிப்பு ரெசிப்பி வேண்டும்.தெரிந்தவர்கள் சொல்லுங்கள், பிளீஸ்.

பச்சை அரிசி - 8 கப்,
வெள்ளை உளுந்து - 1/2 கப்,
பாசிப்பருப்பு - 1/2 கப்,
வெள்ளை எள் - 4 டீஸ்பூன்,
வெண்ணை - 5 -டீஸ்பூன்
முதலில் அரிசியை கழுவி ( ஊற வைக்கக்கூடாது ) காய வைக்கவும். உளுந்து, பாசிபருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். அரிசி, பருப்பு வ்கைளை ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும், தேவையானபோது மாவு, உப்பு, வெண்ணெய், எள் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து முருக்கு அச்சில் போட்டு பிழிந்து எடுக்கவும். இந்த முருக்கு கரகரப்பாக மிகவும் ருசியாக இருக்கும். சிவக்காமல் வெள்ளையாக பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். செய்து சாப்பிட்டுப்பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.

மைதா மாவு வைத்து டைமன்டு வடிவத்தில் பொரித்து பின் சர்க்கரை பாகில் போட்டு செய்யும் இனிப்பு ரெசிப்பி வேண்டும்.தெரிந்தவர்கள் சொல்லுங்கள், பிளீஸ்.

ஹாய் kr நம்ம அறுசுவையில் திருமதி ரேணுகா அவர்கள் கொடுத்துள்ளார்கள்.(கலகலா)
http://www.arusuvai.com/tamil/node/5997
மாலினி
ஆமா, நீங்கதான் ஹிபாவா?

மாலினி

அன்புள்ள மாலினி.
முதலில் கலகலாவிருக்கு நன்றி.
ஹிபா,நான் தான்,ஆனால் இந்த பெயர் எனக்கு ரூபி வைத்தது.
உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி.

மேலும் சில பதிவுகள்