மசால் வடை

தேதி: November 26, 2007

பரிமாறும் அளவு: ஐந்து பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை பருப்பு - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - இரண்டு
பட்டை, ஏலம்- இரண்டு
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - இரண்டு
வெங்காயம் - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - பொடியாக அரிந்தது அரை கப்


 

கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் வடிக்கவும்.
அதில் ஒரு மேசைக்கரண்டி அளவு தனியாக வைக்கவும். மீதியை இரண்டாக பிரிக்கவும்.
மிக்ஸியில் காய்ந்த மிளகாய், பட்டை, ஏலத்தை பொடித்து கொண்டு அதில் பூண்டு, இஞ்சி, பாதி கடலை பருப்பு போட்டு நல்ல மையாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து மீதி பாதியை மிக்ஸியில் வைப்பரில் ஒரு சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும்.
இப்போது முதலில் அரைத்தது, இரண்டாவது அரைத்தது, தனியாக எடுத்து வைத்தது எல்லாவற்றையும் கலந்து அதில் உப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா அனைத்தையும் போட்டு நல்ல பிசைந்து வடைகளாக தட்டி பொரித்தெடுக்கவும்.


நோன்பு கஞ்சி, லெமென் ரைஸ், புளிசாதம், ரசம், தயிர் சாதம், போன்றவைக்கு வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்