கத்தரிக்காய் சப்ஜி

தேதி: November 26, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் -- 150 கிராம்(சதுரமாக நறுக்கி வைக்கவும்)
வெங்காயம் -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
எண்ணைய் -- 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சோம்பு -- 1/2 டீஸ்பூன்
தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் -- 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் -- 1 சிட்டிகை
உப்பு --ருசிக்கேற்ப


 

வாணலியை காய வைத்து 1 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சீரகம், சோம்பு சேர்த்து வெடித்தபின் வெங்காயம் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி அதனுடன் வெட்டி வைத்த கத்தரிக்காயை சேர்த்து 3 நிமிடம் மூடி போட்டு வதக்கவும்.நடுவில் எடுத்து கிளறி விடவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கி மீண்டும் மூடி போட்டு மூடி நடு நடுவெ கிளறி விடவும்.
இதனுடன் சிவப்பு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாதூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
ஒரு கை கொள்ளும் அளவு தண்ணீர் இரு முறை தெளித்து உப்பு போட்டு தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும். மீதியுள்ள எண்ணையை சேர்க்கவும்.
கத்தரிக்காய் சப்ஜி ரெடி.


மேலும் சில குறிப்புகள்