அகத்திப்பூ பச்சைக்கூட்டு

வழங்கியவர் : senthamizh selvi
தேதி : திங்கள், 26/11/2007 - 23:54
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்.
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு.
- அகத்திப்பூ - 10,
- பாசிப்பருப்பு - 200 கிராம்,
- சிறிய வெங்காயம் - 5,
- தக்காளி - 1,
- பச்சை - 3,
- அரிசி - 2 தேக்கரண்டி,
- சீரகம் - 1 தேக்கரண்டி,
- தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி,
- கறிவேப்பிலை - சிறிது,
- கொத்தமல்லி - சிறிது,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 1 ஸ்பூன்,
- நெய் - 1 தேக்கரண்டி.
- அகத்திப்பூவை கழுவி, பச்சைக்கலர் காம்பை எடுத்து விட்டு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்.
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
- பாசிப்பருப்பு நன்கு வெந்தவுடன், நறுக்கிய அகத்திப்பூ, வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- அரிசியை சிவக்க வறுக்கவும்.
- வறுத்த அரிசி, சீரகம், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- வெந்த அகத்திப்பூவுடன் அரைத்தவைகளை சேர்த்து கொதிக்க விடவும்.
- வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டில் கொட்டி இறக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
2 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு
6 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு
6 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு
6 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு
6 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு
6 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு