புதினா துவையல்

தேதி: November 27, 2007

பரிமாறும் அளவு: ஐந்து பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா - ஒரு கட்டு
தேங்காய் - நாலு பத்தை
காய்ந்தமிளகாய் - மூன்று (நெருப்பில் சுட்டது)
உப்பு - தேவையான அளவு
புளி - ஒரு லெமென் சைஸ்
வெங்காயம் - அரை பாகம்


 

முதலில் தேங்காய், காய்ந்த மிளகாய், புளியை கொட்டை நீக்கிவிட்டு மூன்றையும் அரைக்கவும்.
பிறகு மண் போக கழுவி ஆய்ந்த புதினா, உப்பு, வெங்காயம் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் வழித்து வைத்து பரிமாறவும்.


இது லோ ப்ரெஷர் உள்ளவர்கள், அடிக்கடி மயக்கமடைபவர்கள் சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு மசக்கையின் போது வாய்க்கு ருசிப்படும் நிறைய அரைத்து வைத்து கொண்டு அப்ப அப்ப நாவில் தொட்டு வைக்கலாம். டயட்டில் இருப்பவர்கள் ப்ரெட்டில் வைத்து சாப்பிடலாம்.
இது கார சேமியா, கார மக்ரூணி, மைதா தோசை, அடை, எல்லா வகையான கஞ்சிகளுக்கும், எல்லாவகையான வடை போண்டா போன்றவைக்கும் நோயுற்றவர்களுக்கும் பொருந்தும்.

மேலும் சில குறிப்புகள்