ஈசி தேங்காய் சாதம்

தேதி: November 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாதம் -- 2 கப்
தேங்காய் -- 1 மூடி (துருவியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம்
கடலை பருப்பு -- 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு (பொடியாக நறுக்கியது)
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
எண்ணைய் -- 2 டீஸ்பூன்


 

வாணலியை காயவைத்து எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து கடலை பருப்பு போடவும்.
பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு உடனே தேங்காயை போட்டு வதக்கி (அதிக நேரம் வேண்டாம் ருசி கெட்டு விடும், கண் அளவில் போதும்) உடன் உப்பு, சாதத்தை சேர்த்து வதக்கவும் (அடுப்பை அணைத்து விடவும்)பொல பொல வென ஆகி வரும்.
சுவையான ஈசி தேங்காய் சாதம் சில நிமிடத்தில் ரெடி.


இதற்கு தொட்டுக் கொள்ள சுண்டல் மசாலா மிகவும் நன்றாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்