பாசி பருப்பு பாயாசம்

தேதி: November 27, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பாசி பருப்பு -- 1 கப்
பச்சரிசி மாவு -- 2 ஸ்பூன்
வெல்லம் -- 1 கப் (துருவியது)
நெய் -- 1/4 கப்
முந்திரி -- 10 என்னம்
உலந்த திராட்சை -- 10 என்னம்
ஏலக்காய் -- 3 என்னம்(நசுக்கியது)
தேங்காய் துருவல் -- 3 ஸ்பூன்


 

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும்.
பின் பாசிப்பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். (தண்ணீர் தேவை எனில் பாசிப்பருப்பு வேகும் வரை தேவையான அளவு சேர்க்கலாம்)
நன்றாக வெந்தபின் பச்சரிசியை தண்ணீர் விட்டு கலக்கி பருப்பு கலவையில் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும்.
பின் ஏலக்காய்,வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை வேகவிடவும்.
மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி,திராட்சையை வறுத்து பருப்பு கலவையில் கொட்டவும்.
தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி பறிமாறலாம்.
சுவையான ஈசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

பாசி பருப்பு பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"