பரோட்டா - முட்டை குருமா

அன்புள்ள தோழிகளே,பரோட்டாவுக்கு ஏற்ற முட்டை குருமா எப்படி செய்வது என்று கூறவும்.

அன்புடன்
திவ்யா அருண்

மொக்கை : அங்க நிக்கிற
புள்ளையைப் பாருங்க.. பையனா
பொண்ணான்னே தெரியலே..
கண்றாவியா ட்ரெஸ் பண்ணியிருக்கு...

அடுத்தவர் : அது பொண்ணு தாங்க..

மொக்கை : எப்படி அவ்வளவு
கரெக்டா சொல்றீங்க..? கிராப்
வெட்டியிருக்கு.. பேண்ட்
போட்டிருக்கு.. நெத்தியில்
பொட்டு இல்லே..

அடுத்தவர் : என் பொண்ணை
எனக்குத் தெரியாதா..?

மொக்கை : அடடா..
மன்னிச்சுடுங்க சார்..
நீங்கதான் அந்தப் பொண்ணோட
அப்பான்னு தெரியாம தப்பா பேசிட்டேன்.

அடுத்தவர் : நாசமாப்
போச்சு.. நான் அந்தப்
பொண்ணோட அப்பா இல்லே.. அம்மா..!

முட்டை - முன்று
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
டால்டா - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்களி - இரண்டு
தெங்காய் - கால் முறி ( பவுடர் என்றால் இரண்டு தேக்கரண்டி)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைகரண்டி
கொத்து மலி ,புதினா - கொஞ்சம்
பச்சமிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - ஒரு சிறிய தேகரண்டி
உப்பு - தேவைக்கு
பட்டை - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேகரன்டி

முதலில் எண்ணை + டால்டா காய வைத்து பட்டையை போட்டு வெடிக்கவிட்டு வெங்காயத்தை போட்டு வதக்கி இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து பச்ச வாடை போகிறவரை வதக்கவும் பிறகு கொத்து மல்லி புதினா சேர்த்து தக்காளி பச்ச மிலகாயையும் சேர்த்து வதக்கி மிளகாய் தூள்,மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி,உப்பு சேர்த்து வதக்கி வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு முட்டையை உடையாமல் உடைத்து அப்படியே ஊற்ற வேண்டும் ஊற்றி தேங்காயையும் கரைத்து ஊற்றி கிளறாமல் அப்படியே மூடி சிம்மில் வைக்கவும்.
பிறகு இரண்டு நிமிடம் கழித்து அப்படியே தோசை திருப்புவது போல் திருப்பவேண்டும்
மற்றொரு பக்கமும் வேகவிடவேண்டும் வெந்த்ததும் இரக்கி கலக்கி பரிமாரவும்.
இது ரொம்ப தன்னீர் ஊற்ற கூடாது கட்டியாக தான் செய்யனும்.
பரோட்டா,ரொட்டி,தோசக்கு ஏற்றது.
முட்டையில் நிறைய குருமா வகை வகையாக செய்யலாம் அதில் இதுவும் ஒன்று.

Jaleelakamal

டியர் திவ்யா
மேலே முட்டை குருமா கொடுத்துள்ளேன், செய்து பாருங்கள்.
பிறகு என் குறிப்பில் முட்டை குதும்பு என்று ஒரு குறிப்பு இருக்கும் அது மைதா பரோட்டாக்கு சூப்பராக இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

மிகவும் நன்றி அக்கா.செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

தளிகா, படிச்சுட்டு ஒரே சிரிப்பு.இது முதல்லயே தெரியும் என்றாலும் படிக்கும் போது சிரிப்பா வந்தது. படிக்கும் முன் நீங்க முட்டை குருமா குறிப்பு குடுத்திருப்பீங்கனு நினச்சேன்.அதனால என் சிரிப்பு அதிகமாயிருச்சு.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

திவ்யா
ஏன் சிரிப்பு
கள்ளு கடை முட்டையாலா
ஜலீலா

Jaleelakamal

நீங்க தான் தமாஷே சொல்லாம பயங்கரமா சிரிக்கவெப்பீங்க...அக்கா மேல ஒரு ஜோக் இருக்கே அதை படிச்சு பாருங்க சிரிப்ப்பு வர்லன்னா என்னை அடிக்கவும் கூடாது புரியலன்னா திவ்யாட்ட கேளுங்க...உங்க கள்ளுக் கடை முட்டையை ஒரு நாள் சென்ஞ்சுபாத்துடனும்...கள்ளுக்கடைக்கு போனதில்ல முட்டையையாவது சாப்பிடனும்ல

இருகிறதிலேயே ஈசியான ரெசிபி அதுதான் தளிக்கா
இன்னைக்கு என்ன சிம்பிளா பன்னலாம்,ஆ ரசம் கள்ளு கடை முட்டை,
லெமென் சாதம் கள்ளு கடை முட்டை , பிளெயின் தால் கல்ளு கடை முட்டை அப்படி சொல்வோம் (ஊரில்)
ஜலீலா

Jaleelakamal

யாரும் சமைக்கலாம் பகுதியில்,உணவுக் குறிப்பு தேடுவதில் சிரமமாய் இருக்கிரது.
அதனால்,அ ஆ இ, க கா கி கீ என்று வரிசைப் படுத்தினால் ஈசியாக இருக்குமே!
மட்டன் குருமாவை நேற்று பார்த்துட்டு நாளைக்கு செஇயலாம்னு விட்டது தப்பாப் போச்சு,,இன்று ரொம்ம்ம்ம்ம்ப time் தேடி கண்டுபுடிக்க்ரத்துகுள்ளே ஒரு வழி ஆயிட்டேன்

mub

முபீனா கவலை வேன்டாம் மேலே தேடுகன்னு இருக்கே அதுல சேர்ச் பன்னினா வேன்டியது வந்து விழும்..தமிழில் உங்களுக்கு என்ன உணவு வேனுமோ டைப் பன்னி தேடுங்க..

மேலும் சில பதிவுகள்