கேரட் பொரியல் -- 2

தேதி: November 27, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் -- 2 என்னம் (தோலை சீவி துருவிக்கொள்ளவும்)
சின்ன வெங்காயம் -- 10 என்னம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
தேங்காய் துருவல் -- 1/4 கப்
எண்ணைய் -- 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு பின் வெங்காயம் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை உப்பு, துருவிய கேரட் போட்டு வதக்கவும்.
3 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். நடுநடுவே எடுத்து கிளறி விடவும்.
இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
துருவிய கேரட் பொரியல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா உங்களுடைய காரட் பொரியல்-2 செய்வதற்கு எளிதாகவும் சுவையாகவும் இருந்தது
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. லக்ஷ்மிஷங்கர் அவர்கள் தயாரித்த காரட் பொரியலின் படம்

<img src="files/pictures/aa324.jpg" alt="picture" />

படம் வெளிஇட்டமைக்கு அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்