வாழைக்காய் துவரம்

தேதி: November 27, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 2
துருவிய தேங்காய் - 1/2 மூடி
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு


 

வாழைக்காயை தோல் சீவி பெரிய துண்டங்களாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், காய்ந்த மிளகாயை லேசாக சிதைத்துக் கொள்ளவும்.
காயை உப்பு, மஞ்சள் பொடி போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.
நீர் வற்றியதும் சிதைத்த தேங்காய் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாமி நல்ல இருந்தது,குழந்தைகளும் சாப்பிட்டாங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மாமி, தைப்பூசத்தன்று "வாழைக்காய் துவரம்" செய்திருந்தேன் நன்றாகயிருந்தது.
நன்றிகள் பல...............

அன்புடன்:-)..........
உத்தமி:-)

ஆசியா, உத்தமி இருவருக்கும் நன்றி
அன்புடன்
ஜெயந்தி மாமி