ரவா இட்லி

தேதி: November 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை -- 4 கப்
மோர் -- 1 1/2 கப்
எண்ணைய் -- 2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்
கடலை பருப்பு -- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -- 2 என்னம் (பொடிதாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
உப்பு -- ருசிக்கேற்ப
தண்ணீர் -- 1/2 கப்


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கடலை பருப்பு போட்டு இதனுடன் பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு ரவை சேர்த்து வறுக்கவும்.
இதனுடன் உப்பு சேர்த்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு மோர் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
ரவா இட்லி செய்ய மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
பின் இட்லி தட்டில் ஊற்றி இட்லியாக வார்த்தெடுக்கவும்.
சுவையான ரவா இட்லி ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா, எனக்கு மோர் செய்யத் தெரியாது. அதற்குப் பதிலாக தயிரைக் கரைத்து ஊற்றலாமா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

செய்வதற்கு சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.பாராட்டுக்கள்.

Be the best of what you are and the Best will come to you :)

அன்பு அதிரா,
மோர் என்பது தயிரை நீராக கரைத்தால் வருவது தான்...
அதை பயன் படுத்தலாம் தப்பில்லை...
அனு,
தினமும் உப்புமா,கிச்சடி போன்றவைகளை செய்து போர் அடித்தவர்களுக்கு ரவா இட்லி ஒரு வரப்பிரசாதம்...