இடியப்பம் (உறைப்பு) சமையல் குறிப்பு - 647 | அறுசுவை


இடியப்பம் (உறைப்பு)

food image
வழங்கியவர் : arusuvai_team
தேதி : வெள்ளி, 31/03/2006 - 15:21
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • இடியப்பம் மாவு - கால் படி
 • முட்டை - ஒன்று
 • நெய் - 50 கிராம்
 • பச்சைமிளகாய் - 3
 • வெங்காயம் - 50 கிராம்
 • சோம்பு - ஒரு தேக்கரண்டி
 • இஞ்சி - ஒரு துண்டு
 • தேங்காய் - ஒன்று
 • உருணைக்கிழங்கு - கால் கிலோ
 • தக்காளி - 4
 • கறிவேப்பிலை - 2 கொத்து
 • காய்ந்தமிளகாய் - 4
 • மஞ்சள் - ஒரு துண்டு
 • பூண்டு - ஒன்று

 

 • தேங்காயில் கெட்டிப்பால் தனியாக எடுத்துக் கொண்டு, தண்ணீர்ப்பால் ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளவும்.
 • சோம்பு, மஞ்சள், காய்ந்தமிளகாய் ஆகியவற்றை ஒன்றாக கரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை சேர்த்து ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 • உருளைக்கிழங்குகளை அவித்து தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
 • தண்ணீர் பாலில் அரைத்த மசாலாவைக் கரைத்து சிறிது உப்பும் போட்டு பச்சைமிளகாயை முழுதாகப் போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
 • ஓர் அலுமினியச் சட்டியை அடுப்பில் வைத்து, சட்டி சூடானதும் நெய்யைப் ஊற்றி சூடானதும் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 • அத்துடன் இஞ்சி பூண்டையும் போட்டு வதக்கி, பிறகு கறிவேப்பிலை, உருளைக்கிழங்குத் துண்டுகள், நறுக்கின தக்காளி அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி கரைத்து வைத்திருக்கும் மசாலாவை சட்டியில் ஊற்றி கொதிக்க விடவும்.
 • ஒரு கொதி நன்கு கொதித்ததும் இடியப்பங்களை துண்டு துண்டுகளாகப் பிய்த்து அதில் போட்டுக் கிளறவும்.
 • கம்பி கம்பியாகப் பிரிந்ததும், கெட்டிப் பாலில் முட்டை ஊற்றிக் கலக்கி இடியப்பத்தில் தெளித்து தண்ணீர் சற்று வற்றியதும் இறக்கவும்.