ஆலு சிக்கன்

தேதி: November 28, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கோழி தொடைக்கறி - 4,
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 1,
கார்ன்ஃப்ளார் - 1 மேசைக்கரண்டி,
முட்டை - 1,
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - பொரிக்க.


 

கறியைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
கறியுடன் 1/2 டம்ளர் தண்ணீர், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்கி, அடுப்பில் வைத்து தண்ணீர் வற்றும் வரை புரட்டி புரட்டி வேக விட்டு எடுக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி, துருவி, தண்ணீரில் அலசி, பிழிந்து, உலர விட்டு, அத்துடன் கார்ன்ஃப்ளார் மாவை கலந்து வைக்கவும்.
முட்டையை உடைத்து நுரை வர அடிக்கவும்.
வெந்த கறியை ஒவ்வொரு துண்டுகளாக முட்டையில் முக்கி, உருளைக்கிழங்கு துருவலில் நன்கு புரட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்