இஞ்சி துவையல் -1

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இஞ்சி - 3 அங்குலத் துண்டு
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
உலர்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு


 

இஞ்சியை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் இஞ்சி துண்டுகளைப் போட்டு வதக்கி எடுக்கவும்.
ஆறியதும் தேங்காய், மிளகாய், புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
கடுகு தாளித்து அதில் கொட்டிப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்