தேவையானப் பொருட்கள்
- டோஃபு(firm tofu)-100gm
- மிளகாய் வற்றல்-20
- தக்காளி-1
- சின்ன வெங்காயம்-4
- பூண்டு-1பல்
- உப்பு-சுவைக்கேற்ப
- சீனி(சர்க்கரை)-1/2தேக்கரண்டி
- அஜினமோட்டொ(msg)-1pinch
- எண்ணெய்-5மேசைக்கரண்டி
செய்முறை
- எண்ணெய்,டோஃபு தவிர மற்ற பொருட்களை தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
- டோஃபுவை சிறு சதுரங்களாக்கி சூடான எண்ணெயில் பொரிக்கவும்.
- மீதமுள்ள எண்ணெயில் அரைத்த மாசாலாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பொரித்த டோஃபுவை போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
- தண்ணீர் வற்றியதும் இறக்கி சூடாக பரிமாறவும்.
குறிப்பு
டோஃபுவை கிச்சன் டவல் அல்லது சுத்தமான துணி மீது 15 நிமிடம் வைத்தால் அதிலுள்ள அதிக படியான தண்ணீரை துணி உறிஞ்சி விடும்.பொரிக்கும் போது தெரிக்காது.
அதிகமாக தண்ணிர் சேர்த்து க்ரேவியாக இறக்கி சப்பாத்திக்கு தொட்டு கொள்ளலாம்.
இந்திய சுவைக்கேற்ப கறிவேப்பிலை,மல்லிக்கீரை சேர்க்கலாம்.