தேவையானப் பொருட்கள்
- ஸ்பிரிங் ரோல் ஷீட்(spring roll sheet)-15
- எலும்பு நீக்கிய கோழி-1/4கப்(வேக வைத்து மெலிதாக வெட்டியது)
- கேரட்-1/4கப்(துருவியது)
- காளான்-1/4கப்(மெலிதாக வெட்டியது)
- சின்னவெங்காயம்-5(பொடியாக வெட்டியது)
- பூண்டு-4பல்(பொடியாக வெட்டியது)
- இஞ்சி-1சிறுதுண்டு(பொடியாக வெட்டியது)
- பச்சை மிளகாய்-1(பொடியாக வெட்டியது)
- வெங்காய தாள்-2தேக்கரண்டி(பொடியாக வெட்டியது)
- வெள்ளை மிளகுதூள்-1தேக்கரண்டி(கறுப்புமிளகுதூளும் சேர்க்கலாம்)
- சோயா சாஸ்-1/4தேக்கரண்டி
- உப்பு-தேவையான அளவு
- சீனி-1/4தேக்கரண்டி
- எண்ணெய்-பொரிப்பதற்கு
- ஓரங்களை ஒட்ட:
- மைதா-1மேசைகரண்டி
- தண்ணீர் -சிறிதளவு
|
செய்முறை
- வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சின்னவெங்காயம்,பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய்போட்டு வதக்கவும்.
- வெட்டிய கேரட்,கோழி,காளான்,உப்பு,சீனி,மிளகுதூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
- சோயாசாஸ் சேர்த்து கிளறி வெங்காய தாள் தூவி இறக்கவும்.
- ஸ்ப்ரிங் ரோல் ஷீட் மீது இக்கலவையில் 1 மேசை கரண்டி அளவு வைத்து சுருட்டி ஓரங்களை மைதா தண்ணீர் கலவையால் ஒட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
|
குறிப்பு:
ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஈரமான டவலில் சுற்றி வைக்கவும்.இல்லையென்றால் ஷீட் காய்ந்து சுருட்ட வராது.
வழங்கியவர்
கவிசிவா
சமீபத்தியக் கருத்துக்கள்
6 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -