உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

இறால் ஸ்பிரிங் ரோல்

 


தேவையான பொருட்கள்

  • ஸ்பிரிங் ரோல் ஷீட்(spring roll sheet)-15
  • இறால்-15
  • கேரட்-1
  • சாலட் வெள்ளரி-1
  • முட்டைகோஸ்-1/4கப்(மெலிதாக வெட்டியது)
  • சின்னவெங்காயம்-5(பொடியாக வெட்டியது)
  • பூண்டு-4பல்(பொடியாக வெட்டியது)
  • இஞ்சி-1சிறுதுண்டு(பொடியாக வெட்டியது)
  • பச்சை மிளகாய்-1(பொடியாக வெட்டியது)
  • வெங்காய தாள்-2தேக்கரண்டி(பொடியாக வெட்டியது)
  • வெள்ளை மிளகுதூள்-1தேக்கரண்டி(கறுப்புமிளகுதூளும் சேர்க்கலாம்)
  • சோயா சாஸ்-1/4தேக்கரண்டி
  • உப்பு-தேவையான அளவு
  • சீனி-1/4தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு-2தேக்கரண்டி
  • எண்ணெய்-பொரிப்பதற்கு
  • ஓரங்களை ஒட்ட:
  • மைதா-1மேசைகரண்டி
  • தண்ணீர் -சிறிதளவு

செய்முறை

  • இறாலை சுத்தம் செய்து உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து பிசிறி வைக்கவும்.
  • கேரட்,சாலட் வெள்ளரியை 2இன்ச் நீளத்தில் குச்சிகளாக வெட்டவும்.
  • வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சின்னவெங்காயம்,பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய்போட்டு வதக்கவும்.
  • முட்டைகோஸ் உப்பு,சீனி,மிளகுதூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
  • சோயாசாஸ் சேர்த்து கிளறி வெங்காய தாள் தூவி இறக்கவும்.
  • ஸ்ப்ரிங் ரோல் ஷீட் மீது இக்கலவையில் சிறிதளவு வைத்துஅதன் மீது 1இறால்,சிறிதளவு கேரட்,வெள்ளரி வைத்து சுருட்டவும்.
  • ஓரங்களை மைதா தண்ணீர் கலவையால் ஒட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஈரமான டவலில் சுற்றி வைக்கவும்.இல்லையென்றால் ஷீட் காய்ந்து சுருட்ட வராது.

வழங்கியவர்

கவிசிவா


comments