நண்டு மசாலா

வழங்கியவர் : rosemary

தேதி : திங்கள், 03/12/2007 - 11:23

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • நண்டு - அரைக்கிலோ
  • தேங்காய் - அரை மூடி
  • சின்ன வெங்காயம் - 10
  • புளி - எலுமிச்சை அளவு
  • இஞ்சி - சிறிது
  • பூண்டு - 4 பல்
  • பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • பட்டை - சிறிது
  • கிராம்பு - 4
  • ஏலம் - 4
  • உப்பு - 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிது
  • குழம்பு மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி

 

 

நண்டை உடைத்து சுத்தம் செய்துகொள்ளவும். துருவிய தேங்காயுடன் குழம்பு மசாலாவை போட்டு நன்றாக அரைத்து வைக்கவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை தோல் நீக்கி வெட்டி வைக்கவும். புளியை கரைத்து எடுத்துக்கொள்ளவும்.தாளிப்பதற்காக சில வெங்காயத்தை தனியாக எடுத்து வைக்கவும்.

பின்னர் புளித் தண்ணீர், அரைத்த தேங்காய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்தவுடன் உடைத்து வைத்துள்ள நண்டு துண்டங்களை சேர்க்கவும்.

தாளிப்பதற்காக வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருஞ்சீரகத்தை போடவும்.

அதன் பின்னர் நறுக்கின வெங்காயம், ஏலம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.

அனைத்தும் பொன்னிறமாக பொரிந்த பின்னர் அதை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.

நண்டு நன்கு வெந்து குழம்பு கொஞ்சம் சுண்டியதும் இறக்கவும். இதில் தாளிக்கும்போது சிறிது முருங்கை இலை சேர்த்தால் நல்லது. இந்த நண்டு மசாலா குறிப்பினை வழங்கியவர் அறுசுவை நேயரான திருமதி. ரோஸ்மேரி அவர்கள். இவரது குறிப்புகள் பல ஏற்கனவே யாரும் சமைக்கலாமில் இடம்பெற்று நேயர்களின் பாராட்டினைப் பெற்றுள்ளது.

 







வணக்கம் ரோஸ்மேரி.குழம்பு மசாலாத் தூள் என்றால் என்ன?தயவுசெய்து கூறமுடியுமா? நன்றி.

முதல் தடவையாக நண்டு குழம்பு இந்த ரெஸிபி பார்த்து செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. கடந்த 3 வாரங்களிள் 2 தடவை செய்து விட்டேன். செய்வதற்கு சுலபமாகவும் இருந்தது. நன்றி..பாராட்டுக்கள்.

Be the best of what you are and the Best will come to you :)

Be the best of what you are and the Best will come to you :)